< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசை: சுப்மன் கில் முன்னேற்றம்
|6 April 2023 3:13 AM IST
தரவரிசையில் இந்திய வீரர் சுப்மன் கில் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
புதுடெல்லி,
ஒருநாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் நீடிக்கிறார்.
இந்திய வீரர் சுப்மன் கில் ஒரு இடம் முன்னேறி தனது சிறந்த தரநிலையாக 4-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரர் விராட்கோலி ஒரு இடம் அதிகரித்து 6-வது இடத்தை பெற்றுள்ளார். இந்திய கேப்டன் ரோகித் சர்மா 8-வது இடத்தில் மாற்றமின்றி தொடருகிறார்.