< Back
கிரிக்கெட்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்; இந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் விலகல்..!
கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்; இந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் விலகல்..!

தினத்தந்தி
|
16 Dec 2023 11:18 AM IST

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.

இந்நிலையில் இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஒருநாள் தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரும், டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

மேலும் ஒருநாள் தொடரில் தீபக் சாஹருக்கு பதிலாக ஆகாஷ் தீப்பை அணியில் சேர்த்துள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பிசிசிஐ-யின் மருத்துவ குழுவிடம் இருந்து ஷமியின் உடல்தகுதி குறித்த ஒப்புதல் கிடைக்காததால் டெஸ்ட் தொடரில் இருந்து ஷமி விலகி உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.



மேலும் செய்திகள்