< Back
கிரிக்கெட்
சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை - சென்னை போட்டியை நேரில் கண்டு ரசிக்கும் ஓ.பன்னீர்செல்வம்
கிரிக்கெட்

சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை - சென்னை போட்டியை நேரில் கண்டு ரசிக்கும் ஓ.பன்னீர்செல்வம்

தினத்தந்தி
|
6 May 2023 4:55 PM IST

சென்னை- மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியை முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் கண்டுரசித்து வருகிறார்.

சென்னை,

ஐபிஎல் லீக் சுற்றில் இன்று நடைபெற்றுவரும் போட்டியில் சென்னை- மும்பை அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அனி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்துவருகிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டுரசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த போட்டியை முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் கண்டுரசித்து வருகிறார். அவர் சேப்பாக்கம் மைதானத்தில் கருணாநிதி ஸ்டாண்டில் அமர்ந்து போட்டியை கான்கிறார்.

மேலும் செய்திகள்