< Back
கிரிக்கெட்
3-வது டி20 போட்டி : நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்..!! :
கிரிக்கெட்

3-வது டி20 போட்டி : நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்..!! :

தினத்தந்தி
|
17 Jan 2024 2:30 AM IST

போட்டியின் முதல் 2 ஆட்டங்களில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

டுனெடின்,

ஷகீன் ஷா அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 ஆட்டங்களில் முறையே 46 ரன், 21 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டினெடினில் இன்று (இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு) நடக்கிறது. தொடரை கைப்பற்ற நியூசிலாந்து அணி முழு முனைப்புடன் செயல்படும். அதேநேரத்தில் சரிவில் இருந்து மீண்டு வந்து தொடரை இழக்காமல் இருக்க பாகிஸ்தான் அணி போராடும். எனவே இந்த ஆட்டம் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் செய்திகள்