விராட் அல்ல...2024 டி20 உலகக்கோப்பையில் சிறந்த இன்னிங்ஸ் ஆடியது இவர்தான் - மைக் ஹெசன்
|நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
புதுடெல்லி,
நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடருன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் அறிவித்தனர்.
இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி 76 ரன் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதன் காரணமாக இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.
தொடர் ஆரம்பம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத கோலி இறுதிஆட்டத்தில் தனது அனுபவத்தை பயன்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக அவரது இன்னிங்ஸ் 2024 டி20 உலகக்கோப்பையின் சிறந்த இன்னிங்ஸ் ஆக கருதப்பட்டது.
இந்நிலையில் இறுதிப்போட்டியில் விராட் கோலி விளையாடிய ஆட்டத்தை விட ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோகித் சர்மா 92 ரன்கள் அடித்ததே 2024 டி20 உலகக் கோப்பையின் சிறந்த இன்னிங்ஸ் என ஆர்.சி.பி. முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன் கூறியுள்ளார். இது தொடர்பாக நியூசிலாந்து ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் கூறியதாவது,
2024 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோகித் சர்மா அடித்த 92 ரன்களே மிகவும் சிறந்த இன்னிங்ஸ் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.