< Back
கிரிக்கெட்
சச்சின் டெண்டுல்கரின் சாதனைக்காக விளையாடவில்லை... எனக்கு இதுதான் முக்கியம் -  ஜோ ரூட்

கோப்புப்படம்

கிரிக்கெட்

சச்சின் டெண்டுல்கரின் சாதனைக்காக விளையாடவில்லை... எனக்கு இதுதான் முக்கியம் - ஜோ ரூட்

தினத்தந்தி
|
1 Sep 2024 10:28 AM GMT

இங்கிலாந்து - இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது.

லண்டன்

இங்கிலாந்து - இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 427 ரன்களும், இலங்கை 196 ரன்களும் எடுத்தன.

இதனையடுத்து 231 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 54.3 ஓவர்களில் 251 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 103 ரன்கள் குவித்தார். இவர் முதல் இன்னிங்சிலும் சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக அசிதா பெர்னண்டோ மற்றும் லஹிரு குமரா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதன் மூலம் இலங்கை அணிக்கு 483 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி ஆடிய இலங்கை அணி 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 12,377 ரன்கள் எடுத்துள்ளார். இதேபோல் அபார ஆட்டத்தை ஜோ ரூட் தொடர்ந்து வெளிப்படுத்தினால், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் (15,921 ரன்) சாதனையை முறியடிக்க வாய்ப்பு உள்ளது. சச்சினின் சாதனையை முறியடிக்க ஜோ ரூட்டுக்கு இன்னும் 3,544 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

இந்நிலையில் சச்சின் சாதனையை முறியடிப்பது குறித்து பேசிய ஜோ ரூட் கூறியதாவது, நான் தற்போது சச்சின் டெண்டுல்கரின் சாதனையை குறிவைத்து விளையாடவில்லை. என்னால் முடிந்ததை அணிக்காக செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அதுதான் எனக்கு முக்கியம். அதனால் இங்கிலாந்து அணிக்காக என்னால் எவ்வளவு ரன்கள் குவிக்க முடியுமோ அவ்வளவு ரன்களை குவிக்க விரும்புகிறேன்.

எவ்வளவு தூரம் அது சென்று முடியும் என்பதை இறுதியில் பார்க்கலாம். சதம் அடிப்பது என்பது எப்போதுமே ஒரு ஆச்சரியமான உணர்வை தருகிறது. ஆனால் அதைவிட அணி வெற்றி பெறும்போது இன்னும் மகிழ்ச்சி கூடுதலாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்