ஆசிய கோப்பை; இந்திய அணிக்கான தனது நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இவர்கள் தான் - ரவி சாஸ்திரி
|6 அணிகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை தொடர் வரும் 30ம் தேதி தொடங்க உள்ளது.
மும்பை,
6 அணிகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை தொடர் வரும் 30ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.
இந்த தொடருக்கான பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம் ஆகிய அணிகள் அறிவிக்கபட்டுள்ளன. எஞ்சிய 3 அணிகள் தங்களது அணியை அறிவிக்க தீவிரம் காட்டி வருகின்றன. இந்திய அணி வரும் 20ம் தேதி அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற வேண்டிய வேகப்பந்து வீச்சாளர்கள் குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது கருத்தை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
நியாயமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆல்-ரவுண்டர்களான அக்சர் மற்றும் ஷர்துல் ஆகிய இருவருடனும் நான் செல்வேன். மேலும் சஞ்சு சாம்சனை மாற்று வீரராக சேருங்கள்.
இப்போது நீங்கள் வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில், எனக்கு, வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கியம். உங்களுக்கு நான்கு பேர் தேவைப்பட்டால், உங்களிடம் ஏற்கனவே ஒரு ஆல்ரவுண்டர் (பாண்டியா) இருக்கிறார்.
அடுத்த இரண்டு இடங்களில் பும்ரா, ஷமி. முகமது சிராஜை மாற்று வீரராக எடுத்து கொள்ளலாம். அதன் பின்னர் நான் ஷர்துல் தாக்கூருடன் செல்வேன். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஷர்துல் சிறப்பாக செயல்பட்டார். இவ்வாறு அவர் கூறினார்.