கோலி இல்லை... இந்திய அணியில் சிறந்த பிட்னஸ் கொண்ட வீரர் யார்..? பும்ரா பதில்
|ஜஸ்பிரித் பும்ராவிடம் இந்திய அணியில் சிறந்த பிட்னஸ் கொண்ட வீரர் யார்? என்று கேள்வி கேட்கப்பட்டது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா தற்சமயம் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக அறியப்படுகிறார். வித்தியாசமான பவுலிங் ஆக்சன் வைத்து எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து வரும் அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக டி20 உலகக்கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் 17 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.
குறிப்பாக தம்முடைய வித்தியாசமான பவுலிங் ஆக்சனை வைத்து எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் அவர் இந்திய அணியின் மேட்ச் வின்னராக உருவெடுத்துள்ளார். அதனால் பும்ரா தலைமுறையில் ஒருமுறை மட்டுமே வரும் பவுலர் என்று விராட் கோலி பாராட்டினார். மேலும் அவரை வாசிம் அக்ரம், ரிக்கி பாண்டிங் போன்ற உலகின் பல ஜாம்பவான் வீரர்கள் பாராட்டினர்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பும்ராவிடம் இந்திய அணியில் சிறந்த பிட்னஸ் கொண்ட வீரர் யார்? என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் பதிலளித்தது பின்வருமாறு:- "நீங்கள் தேடும் பதில் எனக்கு தெரியும். ஆனால் நான் என்னுடைய பெயரை கூறுவேன். ஏனென்றால் நான் வேகப்பந்து வீச்சாளர். நான் சிறிது காலம் விளையாடி இருக்கிறேன்" என்று கூறினார்.