உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி...சாம்சன், சூர்யகுமார் யாதவுக்கு இடமில்லை - ஆஸி. முன்னாள் வீரர்
|உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டாம் மூடி தேர்வு செய்துள்ளார்.
மெல்போர்ன்,
வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இரு முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் இந்த முறை உலகக்கோப்பைக்கு தகுதி பெறவில்லை.
உலகக்கோப்பைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்திய அணி கடந்த 2011ம் ஆண்டு சொந்த மண்ணில் உலகக்கோப்பையை கைப்பற்றியது போல் இந்த முறையும் சொந்த மண்ணில் உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது.
இந்நிலையில் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் என ரசிகர்கள் தற்போதே விவாதித்து வருகின்றனர். பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உலகக்கோப்பைக்கான தங்களது அணிகளை அறிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டாம் மூடி உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை அறிவித்துள்ளார். இந்த அணியில் அவர் சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரையும் தேர்வு செய்யவில்லை. மேலும், குல்தீப், சாஹல் ஆகிய இருவரையும் அணியில் ஒருசேர தேர்வு செய்துள்ளார்.
டாம் மூடி தேர்வு செய்த இந்திய அணி விவரம்:
ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்த்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), விராட் கோலி, சுப்மன் கில், ஸ்ரேயஸ் அய்யர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்.