< Back
கிரிக்கெட்
ரோகித், பும்ராவுக்கு இடமில்லை.. தனது ஆல் டைம் சிறந்த கனவு இந்திய அணியை வெளியிட்ட கம்பீர்
கிரிக்கெட்

ரோகித், பும்ராவுக்கு இடமில்லை.. தனது ஆல் டைம் சிறந்த கனவு இந்திய அணியை வெளியிட்ட கம்பீர்

தினத்தந்தி
|
2 Sept 2024 7:15 AM IST

கம்பீர் தனது அணியில் கேப்டனாக யாரையும் தேர்வு செய்யவில்லை.

புதுடெல்லி,

நூற்றாண்டை தாண்டி நடைபெற்று வரும் கிரிக்கெட் விளையாட்டில் பல முன்னாள் வீரர்கள் சிறந்த வீரர்களை வைத்து கனவு அணியை தேர்வு செய்வது வழக்கமாகும். அந்த வரிசையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய தலைமை பயிற்சியாளருமான கம்பீர் இந்திய அணியின் ஆல் டைம் சிறந்த லெவன் அணியை தேர்வு செய்துள்ளார்.

அதில் தொடக்க ஆட்டக்காரர்களாக தன்னுடன் சேவாக்கை தேர்ந்தெடுத்துள்ள அவர், 3-வது வரிசையில் டிராவிட்டை தேர்ந்தெடுத்துள்ளார். 4-வது வீரராக சச்சினையும், 5-வதாக விராட் கோலியையும் தேர்வு செய்துள்ளார்.

ஆல் ரவுண்டராக 6-வது வரிசையில் யுவராஜ் சிங்கை தேர்ந்தெடுத்துள்ள அவர், விக்கெட் கீப்பராக எம்.எஸ். தோனியை தேர்வு செய்துள்ளார். பந்து வீச்சாளர்களாக அஸ்வின், கும்ப்ளே, ஜாகீர் கான் மற்றும் இர்பான் பதான் ஆகியோரை தன்னுடைய அணியில் தேர்வு செய்துள்ளார். ஆனால் கேப்டனாக யாரையும் தேர்வு செய்யவில்லை.

கம்பீர் தேர்வு செய்த அணி விவரம் பின்வருமாறு:-

வீரேந்திர சேவாக், கவுதம் கம்பீர், ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, யுவராஜ் சிங், எம்.எஸ். தோனி (கீப்பர்), அனில் கும்ப்ளே, ரவிச்சந்திரன் அஸ்வின், இர்பான் பதான், ஜாகீர் கான்.

இருப்பினும் இவரது அணியில் ரோகித் மற்றும் பும்ராவுக்கு இடமளிக்காதது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்