< Back
கிரிக்கெட்
தோனிக்கு இடமில்லை...யுவராஜ் சிங் தேர்ந்தெடுத்த ஆல் டைம் லெவன் அணி

image courtesy; AFP 

கிரிக்கெட்

தோனிக்கு இடமில்லை...யுவராஜ் சிங் தேர்ந்தெடுத்த ஆல் டைம் லெவன் அணி

தினத்தந்தி
|
14 July 2024 8:29 AM GMT

யுவராஜ் சிங் தேர்ந்தெடுத்த ஆல் டைம் லெவன் அணி 4 ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.

பர்மிங்ஹாம்,

இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிஆட்டத்தில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் யூனிஸ் கான் தலைமையிலான பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன்ஸ் அணி பட்டம் வென்றது. இதையடுத்து அந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட யுவராஜ் சிங்கிடம் ஆல் டைம் லெவனை தேர்வு செய்யுமாறு கூறப்பட்டது.

இதையடுத்து ஆல் டைம் லெவனை தேர்வு செய்த யுவராஜ் சிங் அதில் தொடக்க ஆட்டக்காரர்களாக இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து மிடில் ஆர்டர் வரிசையில் இந்தியாவின் ரோகித் சர்மா, விராட் கோலி, தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

இந்த அணியின் விக்கெட் கீப்பராக ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிற்ஸ்டை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து பந்து வீச்சாளர்களாக இங்கிலாந்தின் ஆண்ட்ரூ பிளின்டாப், இலங்கையின் முத்தையா முரளிதரன், பாகிஸ்தானின் வாசிம் அக்ரம், ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே மற்றும் கிளென் மெக்ராத் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து அணியின் 12வது வீரராக தன்னையே தேர்வு செய்துள்ளார்.

இந்த அணியில் இந்தியாவுக்காக 3 ஐ.சி.சி கோப்பைகளை (ஒருநாள் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி) வென்று கொடுத்த கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு இடம் அளிக்கவில்லை.

யுவராஜ் சிங் தேர்வு செய்த லெவன் அணி விவரம்:

சச்சின் டெண்டுல்கர் (இந்தியா), ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா), ரோகித் சர்மா (இந்தியா), விராட் கோலி (இந்தியா), டி வில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா), ஆடம் கில்கிறிஸ்ட் (ஆஸ்திரேலியா), ஆண்ட்ரூ பிளின்டாப் (இங்கிலாந்து), ஷேன் வார்னே (ஆஸ்திரேலியா), முத்தையா முரளிதரன் (இலங்கை), கிளென் மெக்ராத் (ஆஸ்திரேலியா), வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்). 12வது வீரர்- யுவராஜ் சிங் (இந்தியா).



மேலும் செய்திகள்