கிரிக்கெட்
தோனிக்கு இடமில்லை... இந்தியாவின் ஆல் டைம் ஆடும் லெவனை அறிவித்த தினேஷ் கார்த்திக்

கோப்புப்படம்

கிரிக்கெட்

தோனிக்கு இடமில்லை... இந்தியாவின் ஆல் டைம் ஆடும் லெவனை அறிவித்த தினேஷ் கார்த்திக்

தினத்தந்தி
|
16 Aug 2024 2:47 PM IST

இந்தியாவுக்காக 3 விதமான ஐ.சி.சி கோப்பைகளை வென்ற தோனிக்கு இடம் இல்லாதது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

புதுடெல்லி,

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக். இவர் இந்திய அணிக்காக மூன்று வித கிரிக்கெட்டிலும் ஆடி உள்ளார். அதுமட்டுமில்லாமல் 257 ஐ.பி.எல் போட்டிகளிலும் ஆடி உள்ளார். இவர் சில மாதங்களுக்கு முன்னர் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.

இந்நிலையில், அதிரடி வீரரான தினேஷ் கார்த்திக் 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தக்கூடிய தரமான வீரர்களை கொண்ட இந்தியாவின் ஆல் டைம் ஆடும் லெவனை தேர்ந்தெடுத்துள்ளார். அந்த அணியில் இந்தியாவுக்காக 3 விதமான ஐ.சி.சி கோப்பைகளை வென்ற தோனிக்கு இடம் இல்லாதது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இந்த அணியில் அவர் யாரையும் கேப்டனாகவும், விக்கெட் கீப்பராகவும் குறிப்பிடவில்லை. இந்த அணியில் அவர் தொடக்க வீரர்களாக அதிரடி ஆட்டக்காரர்களாக சேவாக் மற்றும் ரோகித்தை தேர்ந்தெடுத்துள்ளார். இதையடுத்து 3வது வீரராக ராகுல் டிராவிட்டையும், 4வது வீரராக சச்சின் டெண்டுல்கரையும், 5வது வீரராக விராட் கோலியையும் தேர்வு செய்துள்ளார்.

இதையடுத்து ஆல்ரவுண்டர்களாக யுவராஜ் சிங் மற்றும் ரவீந்திர ஜடேஜாவை தேர்வு செய்த கார்த்திக், சுழற்பந்து வீச்சாளர்களாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அனில் கும்ப்ளேவை தேர்வு செய்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களாக ஜாஹீர் கான், ஜஸ்ப்ரித் பும்ராவை தேர்ந்தெடுத்துள்ளார். மேலும், 12-வது வீரராக ஹர்பஜன் சிங்கை தேர்வு செய்துள்ளார்.

தினேஷ் கார்த்திக் தேர்வு செய்த அணி விவரம்;

விரேந்திர சேவாக், ரோகித் சர்மா, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, யுவராஜ் சிங், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், அனில் கும்ப்ளே, ஜாஹீர் கான், ஜஸ்ப்ரீத் பும்ரா. 12வது வீரர்-ஹர்பஜன் சிங்.

மேலும் செய்திகள்