< Back
கிரிக்கெட்
இனி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அல்ல... பெயரை மாற்றிய அணி நிர்வாகம்

Image Source : PTI

கிரிக்கெட்

இனி 'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்' அல்ல... பெயரை மாற்றிய அணி நிர்வாகம்

தினத்தந்தி
|
20 March 2024 11:27 AM IST

ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் அணி பெயரை மாற்றியுள்ளது.

பெங்களூரு,

ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் நாளை மறுதினம் தொடங்க உள்ளது. இதன் முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

இதில் கடந்த 16 சீசன்களாக 'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்' என்ற பெயரில் விளையாடி வந்த பெங்களூர் அணி இந்த முறை "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு" என பெயரை மாற்றியுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு கர்நாடகா மாநில தலைநகரான பெங்களூரின் பெயர் 'பெங்களூரு' என மாற்றப்பட்டது. அப்போதிருந்தே ஐ.பி.எல். அணியின் பெயரையும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என மாற்ற வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், அந்த அணி நிர்வாகம் தற்போது பெயரை மாற்றி இருக்கிறது.

இந்த பெயர் மாற்ற நிகழ்வில் பெண்கள் ஐ.பி.எல்.-ல் சாம்பியன் பட்டம் வென்ற அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளெசிஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்