சாஹல், குல்தீப் இல்லை...உலகக்கோபை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஆஸி. முன்னாள் வீரர்...!
|இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
மெல்போர்ன்,
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.
இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது. இந்நிலையில், உலகக்கோப்பை தொடர் நெருங்குவதையொட்டி பல முன்னாள் வீரர்கள் தங்களது உலகக்கோப்பை அணியை அறிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்துள்ளார். அவர் தேர்வு செய்த அணியில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் குல்தீப், சாஹல் ஆகிய இருவரையும் தேர்வு செய்யவில்லை. இது அனைத்து ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குல்தீப், சாஹல் இருவரையும் உலகக்கோப்பை தொடருக்கு தேர்வு செய்ய வேண்டும் என பல வீரர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வரும் நிலையில் ஹைடன் இருவரையுமே தேர்வு செய்யாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேவேளையில் சஞ்சு சாம்சனை அணியில் தேர்வு செய்துள்ளார்.
மேத்யூ ஹைடன் தேர்வு செய்த இந்திய அணி:-
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி, ஸ்ரேயஸ் அய்யர், கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்த்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்.