< Back
கிரிக்கெட்
கில், ஜெய்ஸ்வால் இல்லை.. டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கக்கூடிய இளம் வீரர் யார்..? - கங்குலி பதில்
கிரிக்கெட்

கில், ஜெய்ஸ்வால் இல்லை.. டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கக்கூடிய இளம் வீரர் யார்..? - கங்குலி பதில்

தினத்தந்தி
|
9 Sept 2024 8:54 PM IST

டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கக்கூடிய இளம் வீரர் யார்? என்பது குறித்து கங்குலி கருத்து தெரிவித்திருக்கிறார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு எதிராக சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 19ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்களும் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கக்கூடிய இளம் வீரர் யார்? என்பது குறித்து கங்குலி கருத்து தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், "டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது ரிஷப் பண்ட் தான். அவர் விபத்திற்கு பிறகு தற்போது உடனடியாக அணிக்கு திரும்பியதை நினைத்து எனக்கு எந்த ஒரு ஆச்சரியமும் கிடையாது. அவர் நிச்சயம் இந்தியாவுக்காக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார். இன்னும் சொல்லப்போனால் தொடர்ந்து ரிஷப் பண்ட், இதே மாதிரி விளையாடினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆல் டைம் சிறந்த வீரராக ரிஷப் பண்ட் வருவார். என்னைப் பொறுத்தவரை ரிஷப் பண்ட் ஒருநாள் மட்டும் டி20 கிரிக்கெட்டிலும் சிறந்து விளங்க வேண்டும். அதிலும் சிறப்பாக விளையாடுவார். நிச்சயம் அவர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டிலும் சிறந்த வீரராக திகழ்வார் என்று நம்புகிறேன்" என கூறினார்.

மேலும் செய்திகள்