என்னுடைய பகுதியில் 30 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லை - இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்
|முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுகவினரை நிவாரணப் பணிகளில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை,
மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும் சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை தற்போது ஓய்ந்துள்ள நிலையில், மாநகரில் ஒருசில இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது. இதனால் சென்னை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூகவலைத்தள பதிவின் மூலம் திமுகவினரை நிவாரணப் பணிகளில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் அஸ்வின் தான் வசிக்கும் பகுதியில் மின்சாரம் இல்லை என்று தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதில், என்னுடைய பகுதியில் 30 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லை. அப்படியென்றால் மற்ற இடங்களில் என்ன நிலை என்பதை யூகித்துக் கொள்ளுங்கள். நமக்கு வேறு என்ன வழி இருக்கிறது என்பது தெரியவில்லை, என்று பதிவிட்டுள்ளார்.