< Back
கிரிக்கெட்
தோனி இல்லை.. வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிறந்த பினிஷர் அவர்தான் - ஆண்டர்சன் புகழாரம்
கிரிக்கெட்

தோனி இல்லை.. வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிறந்த பினிஷர் அவர்தான் - ஆண்டர்சன் புகழாரம்

தினத்தந்தி
|
27 Aug 2024 3:03 PM IST

ஜேம்ஸ் ஆண்டர்சன் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்.

லண்டன்,

சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு தனி இடம் உண்டு . இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட காலமாக அவர் விளையாடி வருகிறார். இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது 700 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக 700 விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.மேலும், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முத்தையா முரளீதரன் (800), வார்னே (708) ஆகியோருக்கு அடுத்தப்படியாக உள்ளார்.

இந்நிலையில் தம்மைப் பொறுத்த வரை விராட் கோலிதான் வெள்ளைப்பந்து (ஒருநாள் மற்றும் டி20) கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் பினிஷர் என்று இங்கிலாந்து முன்னாள் ஜாம்பவான் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "சேசிங் செய்வதில் விராட் கோலியின் புள்ளி விவரங்கள் அற்புதமாக இருக்கிறது. கிரிக்கெட் வரலாற்றில் சேசிங் செய்யும்போது அவரை விட சிறந்த பேட்ஸ்மேன் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை.குறிப்பாக 50 ஓவர் பார்மட்டில் சேசிங் செய்யும்போது அவர் அடித்துள்ள சதங்கள் அபாரமானது. அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் பினிஷர்" என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்