< Back
கிரிக்கெட்
பும்ரா இல்லை.... இந்தியாவின் நம்பர் 1 பவுலர் யார்..? ஷமி வித்தியாசமான பதில்

image courtesy: AFP

கிரிக்கெட்

பும்ரா இல்லை.... இந்தியாவின் நம்பர் 1 பவுலர் யார்..? ஷமி வித்தியாசமான பதில்

தினத்தந்தி
|
21 July 2024 4:31 PM IST

இந்தியாவின் நம்பர் 1 பவுலர் யார்? என்று சமீபத்திய பேட்டியில் முகமது ஷமியிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு கணுக்காலில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் அவர் கடந்த 8 மாதங்களாக எந்த போட்டியிலும் ஆடவில்லை.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தற்சமயத்தில் இந்தியாவின் நம்பர் 1 பவுலர் யார்? என்று முகமது ஷமியிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டார். அதற்கு அவர் கொடுத்த வித்தியாசமான பதில் பின்வருமாறு:-

"தற்சமயத்தில் நான்தான் இந்தியாவின் சிறந்த பவுலர் என்று நினைக்கிறேன். நான், பும்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோர் கூட்டணியாக இந்திய அணிக்கு விளையாடினோம். 5 - 6 பேரைக் கொண்ட எங்கள் கூட்டணியை விட உலகில் வேறு எந்த பவுலர்களும் மகிழ்ச்சியுடன் விளையாடியிருக்க மாட்டார்கள். பொதுவாக நான் நம்பர் 1 அல்லது நம்பர் 2 போன்றவற்றை நம்ப மாட்டேன். நாங்கள் 5 - 6 பேருமே சிறந்த பவுலர்கள்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்