< Back
கிரிக்கெட்
ஓய்வு பெறுவதற்கு இதை விட சிறந்த தருணம் கிடைக்க வாய்ப்பில்லை - கோலி, ரோகித் குறித்து கம்பீர் கருத்து
கிரிக்கெட்

ஓய்வு பெறுவதற்கு இதை விட சிறந்த தருணம் கிடைக்க வாய்ப்பில்லை - கோலி, ரோகித் குறித்து கம்பீர் கருத்து

தினத்தந்தி
|
30 Jun 2024 9:43 PM IST

சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து விராட் கோலி மற்றும் ரோகித் ஓய்வை அறிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. 17 ஆண்டுகள் கழித்து டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆட்ட நாயகன் விருது வாங்கும் நிகழ்வில் இதனை அறிவித்தார். அவரை தொடர்ந்து சிறிது நேரத்திலேயே இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மாவும் ஓய்வை அறிவித்தார். டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளனர்.

இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஓய்வு குறித்து பேசிய கவுதம் கம்பீர் கூறுகையில், "டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இதைவிட சிறந்த தருணம் கிடைக்க வாய்ப்பில்லை. ரோகித், கோலி இருவரும் சிறந்த வீரர்கள். இந்திய அணிக்காக நிறைய செய்துள்ளனர். இருவரும் ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளனர். தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு பங்காற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன்"என கூறினார்.

மேலும் செய்திகள்