< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்டிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட இலங்கை முன்னணி வீரர்... காரணம் என்ன..?

image courtesy: AFP

கிரிக்கெட்

கிரிக்கெட்டிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட இலங்கை முன்னணி வீரர்... காரணம் என்ன..?

தினத்தந்தி
|
16 Aug 2024 10:37 PM IST

இலங்கை வீரர் நிரோஷன் டிக்வெல்லா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கொழும்பு,

இலங்கையில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான லங்கா பிரீமியர் லீக்கின் இந்த வருட சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. அந்தத் தொடரில் இலங்கை அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான நிரோஷன் டிக்வெல்லா ஊக்க மருந்து உட்கொண்டதாக தெரிய வந்துள்ளது. அதனால் அவர் தற்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதன் முடிவு வரும் வரை கிரிக்கெட்டில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இது பற்றி இலங்கை ஊக்க மருந்து தடுப்பு முகமை அவரிடம் சோதனை நடத்தியுள்ளது. அந்த சோதனையில் அவர் தோல்வியை சந்தித்துள்ளார். அதன் காரணமாக இந்த விவகாரத்தின் இறுதி முடிவு வெளிவரும் வரை டிக்வெல்லா உள்ளூர் போட்டிகளில் கூட விளையாடுவதற்கு தற்காலிகமாக தடை பெற்றுள்ளார். இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்