என் வாழ்க்கையில் அடுத்த அத்தியாயம்- திருமண நிச்சயதார்த்த புகைப்படத்தை பகிர்ந்த வெங்கடேஷ் ஐயர்...!
|வெங்கடேஷ் ஐயருக்கும், ஸ்ருதி ரங்கநாதனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
சென்னை,
ஐபிஎல் கிரிக்கெட் மூலமாக இந்திய அணியில் இடம் பெற்றவர் வெங்கடேஷ் ஐயர். ஐபிஎல் தொடரில் வெங்கடேஷ் ஐயர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இவர் ஐபிஎல் தொடரில் 36 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உள்பட 7 அரை சதங்களுடன் 956 ரன்கள் எடுத்துள்ளார். 2021-ம் ஆண்டு அறிமுக தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அந்த ஆண்டே இந்திய டி20 அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
9 போட்டிகளில் விளையாடிய இவர் 75 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன் பிறகு 2022-ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்த இவர் 2 ஒருநாள் போட்டிகளில் ஆடி 28 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். தொடர்ந்து சரியாக விளையாடாத காரணத்தால் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் வெங்கடேஷ் ஐயருக்கும், ஸ்ருதி ரங்கநாதனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வெங்கடேஷ் ஐயர், என் வாழ்க்கையில் அடுத்த அத்தியாயம் என்று குறிப்பிட்டுள்ளார்.