< Back
கிரிக்கெட்
Image Courtesy : AFPImage Courtesy : AFP
கிரிக்கெட்

இங்கிலாந்து அணியின் 50 ஓவர் மற்றும் டி20 போட்டிகளுக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்..!!

தினத்தந்தி
|
18 May 2022 8:34 PM IST

50 ஓவர் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் புதிய பயிற்சியாளராக மேத்யூ மோட் நியமிக்கப்பட்டுள்ளார்.

லண்டன்,

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜோ ரூட் விலகியதையடுத்து புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டார். அதை தொடர்ந்து இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கிரிக்கெட் பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கலம் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் 50 ஓவர் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் புதிய பயிற்சியாளராக மேத்யூ மோட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2015ம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார்.

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் பல முக்கியமான உலக கோப்பை வெற்றிகளில் இவர் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளார். இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க உள்ளதால் , ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து இவர் விலகி உள்ளார்.

மேலும் செய்திகள்