< Back
கிரிக்கெட்
3வது டி20 போட்டி  - இந்தியா பந்துவீச்சு
கிரிக்கெட்

3வது டி20 போட்டி - இந்தியா பந்துவீச்சு

தினத்தந்தி
|
22 Nov 2022 12:28 PM IST

இந்தியா-நியூசிலாந்து இடையேயான 3வது டி20 போட்டியில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

நேப்பியர்,

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. வெலிங்டனில் நடக்க இருந்த தொடக்க ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. மவுன்ட் மாங்கானுவில் நடந்த 2-வது ஆட்டத்தில் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை பந்தாடிய இந்தியா தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நேப்பியரில் தொடங்கியது.

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி பந்து வீச்சில் ஈடுபடுகிறது. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சவுத்தி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்த ஆண்டில் இந்தியா விளையாடும் கடைசி சர்வதேச 20 ஓவர் போட்டி இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்