< Back
கிரிக்கெட்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு...!!

image courtesy; ICC

கிரிக்கெட்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு...!!

தினத்தந்தி
|
11 Sept 2023 10:34 AM IST

உலகக்கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கபட்டுள்ளது.

வெலிங்டன்,

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தாண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பீல்டிங் செய்கையில் காயமடைந்து ஓய்விலிருந்து திரும்பிய கேன் வில்லியம்சன் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில் டிம் சவுதி , டிரென்ட் பவுல்ட் போன்ற திறமையான பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி பின்வருமாறு;-

நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் பவுல்ட், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி, வில் யங்.

மேலும் செய்திகள்