< Back
கிரிக்கெட்
ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு

image courtesy; ICC

கிரிக்கெட்

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு

தினத்தந்தி
|
18 Feb 2024 2:54 PM IST

காயம் காரணமாக கடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய டேரில் மிட்செல் அணிக்கு திரும்பியுள்ளார்.

வெலிங்டன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 29-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக கடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய டேரில் மிட்செல் அணிக்கு திரும்பியுள்ளார்.

நியூசிலாந்து அணி விவரம் பின்வருமாறு;-

டிம் சவுதி (கேப்டன்), டாம் பிளண்டெல், டேவான் கான்வே, மேட் ஹென்ரி, ஸ்காட் குஜ்லின், டாம் லதம், டேரில் மிட்செல், வில் ஒ ரூர்க், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர், நீல் வாக்னர், வில்லியம்சன், வில் யங்.

மேலும் செய்திகள்