< Back
கிரிக்கெட்
நியூசிலாந்து வீரர் டேவான் கான்வே-க்கு கொரோனா ..!

Image : AFP

கிரிக்கெட்

நியூசிலாந்து வீரர் டேவான் கான்வே-க்கு கொரோனா ..!

தினத்தந்தி
|
19 Jan 2024 1:02 PM IST

பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.

ஆக்லாந்து,

ஷகீன் ஷா அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 ஆட்டங்களில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான 4வது ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டேவான் கான்வே இந்த போட்டியில் விளையாடவில்லை .

டேவான் கான்வே-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் இந்த போட்டியில் விளையாடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்