< Back
கிரிக்கெட்
கடைசி ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு
கிரிக்கெட்

கடைசி ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு

தினத்தந்தி
|
24 Jan 2023 1:38 PM IST

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்தூர்,

இந்தியாவுக்கு வருகை தந்துள்ளது டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஐதராபாத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்திலும், ராய்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

மேலும் செய்திகள்