< Back
கிரிக்கெட்
நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் நியமனம்

image courtesy: AFP

கிரிக்கெட்

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் நியமனம்

தினத்தந்தி
|
29 Aug 2024 12:27 PM IST

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வெலிங்டன்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக அதன் முன்னாள் வீரர் ஜேக்கப் ஓரம் நியமிக்கப்பட்டுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்களுக்காக நியூசிலாந்து அணியை வலுப்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணிக்காக 200-க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவரின் அனுபவம் நியூசிலாந்து அணிக்கு பயனுள்ளதாக அமையும்.

இவரது பயணக்காலம் எதிவரும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ஆரம்பமாக உள்ளது.

மேலும் செய்திகள்