நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: 3-வது நாள் ஆட்டமும் ரத்து
|இந்த போட்டியில் இன்னும் டாஸ் கூட போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கிரேட்டர் நொய்டா,
நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் நேற்று முன்தினம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் ஒரு பந்து கூட வீசப்படாமல் முதல் நாள் ஆட்டம் ரத்தானது. மைதானத்தில் வடிகால் வசதி சரியாக இல்லாததால் தேங்கிய தண்ணீரை சீக்கிரம் வெளியேற்ற முடியவில்லை.
இதனையடுத்து நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நேற்றும் மைதானத்தில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற முடியாத சூழலால் 2-வது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று 3வது நாள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், ஈரமான அவுட்பீல்ட் காரணமாக இன்றைய ஆட்டமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்துள்ளனர். இந்த போட்டியில் இன்னும் டாஸ் கூட போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.