< Back
கிரிக்கெட்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி வெளியீடு

image credit: @chennaiIPL

கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி வெளியீடு

தினத்தந்தி
|
8 Feb 2024 10:46 PM IST

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விரைவில் தொடங்கவுள்ளது.

சென்னை,

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில், சென்னை கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ, டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கட்டா நைட்ரைடர்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விரைவில் நடக்கவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்களுக்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்றது.

ரச்சின் ரவீந்திரா (1.8 கோடி), ஷர்தூல் தாகூர் (4 கோடி), டேரில் மிட்செல் (14 கோடி), சமீர் ரிஸ்வி (8.40 கோடி), முஷ்பிகுர் ரஹ்மான் (2 கோடி), அவனிஷ் ராவ் ஆரவல்லி (20 லட்சம்) ஆகியோரை இந்த 17ஆவது சீசனுக்கான மினி ஏலத்தில் சென்னை அணி வாங்கியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் ஸ்பான்சர் செய்து வந்தது. இந்த நிலையில், சென்னை அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் இணைந்துள்ளது. அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஜெர்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்