< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர்கள் நியமனம்
|28 April 2024 3:25 PM IST
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கராச்சி,
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அணியை வலுப்படுத்தும் விதமாக புதிய தலைமை பயிற்சியாளர்களை நியமித்துள்ளது. அதன்படி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான புதிய தலைமை பயிற்சியாளராக கேரி கிரிஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பயிற்சியின் கீழ்தான் இந்திய கிரிக்கெட் அணி 2011-ல் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது. இவரது பதவிக்காலம் எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடருடன் ஆரம்பமாக உள்ளது.
டெஸ்ட் போட்டிகளுக்கான தலைமை பயிற்சியாளராக ஜேசன் கில்லெஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் வீரரான அசார் மக்மூத் அனைத்து வடிவிலான போட்டிகளுக்கும் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.