< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை தொடருக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு

image courtesy: ICC

கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை தொடருக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு

தினத்தந்தி
|
13 May 2024 11:52 PM IST

டி20 உலக்கோப்பை தொடருக்கான நெதர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்ஸ்டர்டாம்,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி (இந்திய நேரப்படி ஜூன் 2ம் தேதி) முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்தப் போட்டி தொடரில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை அறிவித்து வருகின்றன.

ஏற்கெனவே நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நேபாளம், ஓமன், அமெரிக்கா, உகாண்டா, ஸ்காட்லாந்து, அயர்லாந்து, இலங்கை போன்ற நாடுகள் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன.

இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்க உள்ள நெதர்லாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அந்த அணிக்கு ஸ்கார்ட் எட்வர்ட்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நெதர்லாந்து அணி விவரம் பின்வருமாறு:-

ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), ஆர்யன் தத், பாஸ் டி லீட், டேனியல் டோரம், ப்ரெட் கிளாசென், லோகன் வான் பீக், மேக்ஸ் ஓ'டவுட், மைக்கேல் லெவிட், பால் வான் மீகெரென், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், தேஜா நிடமானுரு, டிம் பிரிங்கிள், விக்ரம் சிங், கிங்மா, வெஸ்லி பாரேசி.

ரிசர்வ் வீரர்: கைல் க்ளீன்

மேலும் செய்திகள்