ஆசிய கோப்பை தொடருக்கான நேபாள அணி அறிவிப்பு...!
|ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான நேபாள அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ந் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்நிலையில் இந்த தொடருக்கான அணிகளை அந்தந்த நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. இந்த தொடருக்கான பாகிஸ்தான், வங்கதேச அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான நேபாள அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் சந்தீப் லமிச்சனே இடம் பிடித்துள்ளார்.
ஆசிய கோப்பை தொடருக்கான நேபாள அணி விவரம்:
ரோகித் பெளடல் (கேப்டன்), குஷால் புர்டெல், ஆசிப் ஷேக் (விக்கெட் கீப்பர்), பீம் ஷர்கி, குஷால் மல்லா, ஆரிப் ஷேக், திபேந்திர சிங் ஐரி, குல்ஷன் ஜா, சோம்பால் கமி, கரண் கேசி, சந்தீப் லமிச்சனே, லலித் ராஜ்பன்ஷி, பிரதீஷ் ஜிசி, ஷ்யாம் தாகல், சுந்தீப் ஜோரா, கிஷோர் மஹதோ, அர்ஜுன் சவுத்.