< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை தொடருக்கான நேபாளம் அணி அறிவிப்பு

image courtesy: ICC 

கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை தொடருக்கான நேபாளம் அணி அறிவிப்பு

தினத்தந்தி
|
1 May 2024 8:23 PM IST

டி20 உலகக்கோப்பை தொடருக்கான நேபாளம் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

காத்மாண்டு,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்தப் போட்டி தொடரில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை இன்றைக்குள் (மே 1ம் தேதி) அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அறிவித்துள்ளது.

ஏற்கெனவே நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன. இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்க உள்ள 15 வீரர்கள் கொண்ட நேபாளம் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அந்த அணிக்கு ரோகித் பவுடல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேபாளம் அணி விவரம் பின்வருமாறு:-

ரோகித் பவுடல் (கேப்டன்), ஆசிப் ஷேக், அனில் குமார் சா, குஷால் புர்டெல், குஷால் மல்லா, திபேந்திர சிங் ஐரி, லலித் ராஜ்பன்ஷி, கரண் கே.சி, குல்ஷன் ஜா, சோம்பால் கமி, பிரதிஸ் ஜி.சி, சுந்தீப் ஜோரா, அபினாஷ் போஹாரா, சாகர் தாகல், கமல் சிங் ஐரி

மேலும் செய்திகள்