< Back
கிரிக்கெட்
டிஎன்பிஎல்: திருச்சியை வீழ்த்தி நெல்லை அபார வெற்றி
கிரிக்கெட்

டிஎன்பிஎல்: திருச்சியை வீழ்த்தி நெல்லை அபார வெற்றி

தினத்தந்தி
|
6 July 2023 1:04 AM IST

திருச்சியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நெல்லை அபார வெற்றிபெற்றது.

நெல்லை,

நடப்பு டிஎன்பிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ் - திருச்சி அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற நெல்லை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து திருச்சி முதலில் பேட்டிங் செய்த நிலையில் போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 19 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இறுதியில் திருச்சி அணி 19 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ஜாபர் ஜமால் அதிரடியாக ஆடி 53 பந்துகளில் 96 ரன்கள் குவித்தார்.

இதனை தொடர்ந்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் நெல்லை அணி களமிறங்கியது. அப்போது மழை குறிக்கிட்டதால் டக் ஒர்த் லூயிஸ் முறைப்படி ஓவர்கள் குறைக்கப்பட்டது. அதன்படி, நெல்லை அணி 16 ஓவர்களில் 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய நெல்லை அணியின் வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்க வீரர் அருண் 13 ரன்னிலும், சூர்யபிரகாஷ் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த குருசாமி, ராஜகோபால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இறுதியில் நெல்லை ராயல் கிங்ஸ் 11.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் திருச்சியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நெல்லை அபார வெற்றிபெற்றது.

மேலும் செய்திகள்