நெல்லை ராயல் கிங்ஸ் - மதுரை பாந்தர்ஸ் ஆட்டம்: மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்
|டி.என்.பி.எல் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோத உள்ளன.
கோவை,
8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் 9 லீக் ஆட்டங்கள் கடந்த 11ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து தற்போது 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்த தொடரின் இன்றைய ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்நிலையில் தற்சமயம் அங்கு மழை பெய்வதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.