< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை தொடருக்கான நமீபியா அணி அறிவிப்பு

Image Courtesy: @ICC

கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை தொடருக்கான நமீபியா அணி அறிவிப்பு

தினத்தந்தி
|
11 May 2024 9:14 AM IST

டி20 உலகக்கோப்பை தொடருக்கான நமீபியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

விந்தோக்,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி (இந்திய நேரப்படி ஜூன் 2ம் தேதி) முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்தப் போட்டி தொடரில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை அறிவித்து வருகின்றன.

ஏற்கெனவே நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நேபாளம், ஓமன், அமெரிக்கா, உகாண்டா, ஸ்காட்லாந்து, அயர்லாந்து, இலங்கை போன்ற நாடுகள் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன.

இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்க உள்ள நமீபியா அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அந்த அணிக்கு ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடருக்கான நமீபியா அணி விவரம்; ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் (கேப்டன்), ஜேன் கிரீன், மைக்கேல் வான் லிங்கன், டிலான் லீச்சர், ரூபன் ட்ரம்பெல்மேன், ஜாக் பிரஸ்ஸல், பென் ஷிகோங்கோ, டாங்கேனி லுங்காமேனி, நிகோ டேவின், ஜே ஜே ஸ்மிட், ஜான் ப்ரைலின்க், ஜே பி கோட்ஸே, டேவிட் வைஸ், பெர்னார்ட் ஷால்ட்ஸ், மலான் க்ரூகர், பி.டி. ப்ளிக்நாட்


மேலும் செய்திகள்