< Back
கிரிக்கெட்
டோனிக்காக சென்னை மீண்டும் ஒருமுறை கோப்பை வெல்ல என் மனம் விரும்புகிறது - சுனில் கவாஸ்கர்
கிரிக்கெட்

"டோனிக்காக சென்னை மீண்டும் ஒருமுறை கோப்பை வெல்ல என் மனம் விரும்புகிறது" - சுனில் கவாஸ்கர்

தினத்தந்தி
|
28 May 2023 4:16 PM IST

டோனிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் ஒரு முறை கோப்பை வெல்ல என் மனம் விரும்புகிறேன் என்று சுனில் கவாஸ்கர் கூறினார்.

அகமதாபாத்,

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் மோதுகின்றன.

இதனையடுத்து, ஐபிஎல் கோப்பையை யார் வெல்வார் என்பது குறித்து பல்வேறு கிரிக்கெட் பிரபலங்கல் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் ஐபிஎல் கோப்பையை வெல்லப்போவது யார் என்பது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த 2வது அணி சென்னை சூப்பர் கிங்ஸ். டோனி கோப்பையை வென்றால் மிகவும் சிறப்பாக என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிபெற வேண்டும் என என் மனம் நினைக்கிறது. அமைதியாகவும் நிதானமாகவும் எடுக்கும் முடிவுகள் வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் மிகச்சிறந்த அணி. அந்த அணியின் சுப்மன் கில் மிகச்சிறந்த தொடக்க வீரராஅக உள்ளார். அந்த அணியில் ஹர்திக் பாண்டியாகவும் உள்ளார்' என்றார்.

மேலும் செய்திகள்