< Back
கிரிக்கெட்
பகத் பாசிலின் ஆவேஷம் திரைப்படத்தில் வரும் பாடலுக்கு ரீல்ஸ் செய்த முஸ்தாபிசுர் - பதிரனா... வீடியோ வைரல்
கிரிக்கெட்

பகத் பாசிலின் 'ஆவேஷம்' திரைப்படத்தில் வரும் பாடலுக்கு ரீல்ஸ் செய்த முஸ்தாபிசுர் - பதிரனா... வீடியோ வைரல்

தினத்தந்தி
|
1 May 2024 5:06 PM IST

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னை - பஞ்சாப் அணிகள் மோத உள்ளன.

சென்னை,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 48 லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இன்னும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற உள்ள அணிகள் எது? என்பதை தீர்மானிக்க முடியவில்லை.

இதில் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இதனையடுத்து சென்னை, தனது 10-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியுடன் இன்று சேப்பாக்கம் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களான முஸ்தாபிசுர் ரகுமான் - மதீஷா பதிரனா இருவரும் இணைந்து பகத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேஷம் திரைப்படத்தில் வரும் பாடலுக்கு ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்