< Back
கிரிக்கெட்
5வது கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்ற பின் மும்பை அணி நிர்வாகம் போட்ட டுவீட்
கிரிக்கெட்

5வது கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்ற பின் மும்பை அணி நிர்வாகம் போட்ட டுவீட்

தினத்தந்தி
|
30 May 2023 10:40 AM IST

கோப்பையை வென்ற சென்னை அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அகமதாபாத்,

அகமதாபாத் மைதானத்தில் மழைக்கு மத்தியில் பரபரப்பாக நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி சென்னை அணி த்ரில் வெற்றி பெற்று, 5வது முறையாக சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றது. இந்த வெற்றியை சென்னை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கோப்பையை வென்ற சென்னை அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்தநிலையில் சென்னை அணிக்கு, அதன் பரம எதிரியான மும்பை அணி, டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து மும்பை அணி நிர்வாகம் தன்னுடைய டுவிட்டரில், "இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற சென்னை அணிக்கு வாழ்த்துக்கள். சென்னை அணி இதற்கு முற்றிலும் தகுதியானது" என கூறியுள்ளது.

மேலும் செய்திகள்