< Back
கிரிக்கெட்
புள்ளிப்பட்டியலில் ஏற்றம் கண்ட மும்பை, லக்னோ - கடைசி இடங்களில் எந்த அணிகள் தெரியுமா...?

Image Courtesy: AFP 

கிரிக்கெட்

புள்ளிப்பட்டியலில் ஏற்றம் கண்ட மும்பை, லக்னோ - கடைசி இடங்களில் எந்த அணிகள் தெரியுமா...?

தினத்தந்தி
|
8 April 2024 8:53 AM IST

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

மும்பை,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இதுவரை 21 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் டெல்லியை வீழ்த்தி மும்பையும், குஜராத்தை வீழ்த்தி லக்னோவும் வெற்றி பெற்றன.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இந்நிலையில் நேற்றைய ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதன்படி கடைசி இடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் 8வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

குஜராத்துக்கு எதிராக நேற்று பெற்ற வெற்றியின் மூலம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 3வது இடத்தில் இருந்த சென்னை 4வது இடத்திற்கு சரிந்துள்ளது.

மும்பைக்கு எதிராக தோல்வி கண்டதன் மூலம் புள்ளிப்பட்டியலில் டெல்லி கேப்பிடல்ஸ் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. 5 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி பெற்றுள்ள பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

21 லீக் ஆட்டங்களின் முடிவில் ஐ.பி.எல் புள்ளிப்பட்டியல் விவரம்;

1. ராஜஸ்தான் ராயல்ஸ்: 4 வெற்றி - 0 தோல்வி - 8 புள்ளிகள் (+1.120 ரன்ரேட்)

2. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 3 வெற்றி - 0 தோல்வி - 6 புள்ளிகள் (+2.518 ரன்ரேட்)

3. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - 3 வெற்றி - 1 தோல்வி - 6 புள்ளிகள் (+0.775 ரன்ரேட்)

4. சென்னை சூப்பர் கிங்ஸ் - 2 வெற்றி - 2 தோல்வி - 4 புள்ளிகள் (+ 0.517 ரன்ரேட்)

5. சன்ரைசர்ஸ் ஐதராபாத் - 2 வெற்றி - 2 தோல்வி - 4 புள்ளிகள் (+0.409 ரன்ரேட்)

6. பஞ்சாப் கிங்ஸ் - 2 வெற்றி - 2 தோல்வி - 4 புள்ளிகள் (-0.220 ரன்ரேட்)

7. குஜராத் டைட்டன்ஸ் - 2 வெற்றி - 3 தோல்வி - 4 புள்ளிகள் (-0.797 ரன்ரேட்)

8. மும்பை இந்தியன்ஸ் - 1 வெற்றி - 3 தோல்வி - 2 புள்ளிகள் (-0.704 ரன்ரேட்)

9. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 1 வெற்றி - 4 தோல்வி - 2 புள்ளிகள் (-0.843 ரன்ரேட்)

10. டெல்லி கேப்பிடல்ஸ் - 1 வெற்றி - 4 தோல்வி - 2 புள்ளிகள் (-1.370 ரன்ரேட்)

மேலும் செய்திகள்