சூப்பர் மேன் உடையணிந்து விமானத்தில் பயணித்த மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்...காரணம் என்ன தெரியுமா?
|மும்பை அணியில் இஷான் கிஷன் உள்ளிட்ட வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் லோகோவுடன் கூடிய வேடிக்கையான சூப்பர் மேன் உடையணிந்து விமானத்தில் பயணித்தனர்.
மும்பை,
ஐ.பி.எல்.-ல் 5 பட்டங்கள் வென்று சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு சீசனில் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை சறுக்கலுடன் தொடங்கி உள்ளது. இதனையடுத்து மும்பை அணி தனது 4-வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோத உள்ளது.
இந்நிலையில் மும்பை அணியில் இஷான் கிஷன் உள்ளிட்ட வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் லோகோவுடன் கூடிய வேடிக்கையான சூப்பர் மேன் உடையணிந்து விமானத்தில் பயணித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இதற்கான காரணம் என்னவெனில், அணியின் ஆலோசனை கூட்டத்திற்கு தாமதமாக வந்ததால் நிர்வாகம் இவர்களுக்கு இந்த விநோதமான தண்டனையை வழங்கியுள்ளது. ஆலோசனை கூட்டங்களுக்கு தாமதமாக வரும் வீரர்கள், அவர்கள் அடுத்த முறை பயணம் மேற்கொள்ளும்போது சூப்பர் மேன் உடை அணிந்து வர வேண்டும் என மும்பை அணி நிர்வாகம் விநோதமான தண்டனையை அறிமுகப்படுத்தி உள்ளது.
தொடர் தோல்விகளால் நெருக்கடியான சூழலில் இருக்கும் மும்பை அணி, இதுபோன்ற ஜாலியான தண்டனைகளால் அணிக்குள் உற்சாகம் ஏற்படும் என கருதுகிறது.