< Back
கிரிக்கெட்
டி20 வரலாற்றில் முதல் விக்கெட் கீப்பராக மாபெரும் சாதனை படைத்த எம்.எஸ். தோனி

image courtesy:AFP

கிரிக்கெட்

டி20 வரலாற்றில் முதல் விக்கெட் கீப்பராக மாபெரும் சாதனை படைத்த எம்.எஸ். தோனி

தினத்தந்தி
|
31 March 2024 10:57 PM IST

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணி வீரர் பிரித்வி ஷா அடித்த பந்தை எம்.எஸ். தோனி கேட்ச் பிடித்து அசத்தினார்.

விசாகப்பட்டினம்,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஒவர்கள் முடிவில் 191 ரன்கள் அடித்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி சென்னை விளையாடி வருகிறது.

முன்னதாக இந்த போட்டியில் டெல்லி பேட்டிங் செய்தபோது அந்த அணி வீரர் பிரித்வி ஷா அடித்த பந்தை எம்.எஸ். தோனி கேட்ச் பிடித்து அசத்தினார். இதன் மூலம் டி20 வரலாற்றில் விக்கெட் கீப்பராக 300 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:-

1. எம்.எஸ்.தோனி - 300 விக்கெட்டுகள்

2. கம்ரான் அக்மல்/தினேஷ் கார்த்திக் - 274 விக்கெட்டுகள்

3. டி காக் - 270 விக்கெட்டுகள்

4. பட்லர் - 209 விக்கெட்டுகள்

மேலும் செய்திகள்