< Back
கிரிக்கெட்
ஜெர்சி எண் - 7 ஏன் மிக முக்கியம்..? - எம்.எஸ். தோனி அளித்த பதில்

image courtesy; AFP

கிரிக்கெட்

'ஜெர்சி எண் - 7' ஏன் மிக முக்கியம்..? - எம்.எஸ். தோனி அளித்த பதில்

தினத்தந்தி
|
11 Feb 2024 3:02 PM IST

இந்திய அணிக்காக அவர் செய்த சாதனைகளை கருத்தில் கொண்டு தோனியின் ஜெர்சி எண் 7-க்கு பி.சி.சி.ஐ ஓய்வு அளித்துள்ளது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன் எம்.எஸ்.தோனி. இவரது தலைமையின் கீழ் இந்திய அணி ஒருநாள் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி கோப்பைகளை வென்றுள்ளது. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.

தற்போது ஐ.பி.எல் தொடரில் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் தோனி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் நிரூபர் ஒரு கேள்வி எழுப்பினார். அந்த கேள்வி என்னவென்றால், ஏன் நம்பர் 7 உங்களுக்கு முக்கியம்..?. இத்தனை மணிக்குள் வீட்டிற்கு வரவேண்டும் என உங்கள் பெற்றோர் கூறிய நேரமா அது..? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து தோனி கூறியதாவது, இல்லை. நான் உலகிற்கு வருவேன் என பெற்றோர் முடிவு செய்த நாள்தான் 7. ஜூலை 7ம் தேதி பிறந்தேன். ஜூலை ஆண்டின் 7வது மாதம். அதனால் வெளியில் எந்த எண் வேண்டும் என யாராவது கேட்டால் 7 என சொல்வது எளிதாக இருந்தது. என கூறினார்.

இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு ஒருநாள் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி கோப்பைகளை வென்று தந்துள்ள தோனி தன்னுடையை கிரிக்கெட் ஜெர்சியில் 7 என்ற எண்னை பயன்படுத்தினார். மேலும், இந்திய அணிக்காக அவர் செய்த சாதனைகளை அடுத்து அவரின் ஜெர்சி எண் 7-க்கு பி.சி.சி.ஐ ஓய்வு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்