< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
எம்.எஸ்.தோனியின் ஜெர்சி நம்பர் '7'-க்கு ஓய்வை அறிவித்த பிசிசிஐ..? - வெளியான தகவல்..!
|15 Dec 2023 10:49 AM IST
முன்னதாக இந்திய முன்னாள் வீரர் சச்சினை கவுரவிக்கும் வகையில், அவரது ஜெர்சி நம்பர் ‘10’-க்கு பிசிசிஐ ஓய்வு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுபவர் எம்.எஸ்.தோனி. இவரது தலைமையிலான இந்திய அணி ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 உலகக்கோப்பைகளை வென்றுள்ளது. மேலும் பல தொடர்களில் இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டிற்கு முன்னாள் கேப்டன் தோனி செய்துள்ள பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், அவரது ஜெர்சி நம்பர் '7'-க்கு இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ஓய்வு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் '7'ஆம் நம்பர் பொறித்த ஜெர்சியை இந்திய வீரர், வீராங்கனைகள் யாரும் பயன்படுத்த முடியாது. இதற்கு முன்னதாக இந்திய முன்னாள் வீரர் சச்சினை கவுரவிக்கும் வகையில், அவரது ஜெர்சி நம்பர் '10'-க்கு பிசிசிஐ ஓய்வு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.