< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்டுக்கு பிறகு என்ன செய்யப் போகிறீர்கள்? - எம்.எஸ்.தோனி அளித்த பதில்
கிரிக்கெட்

கிரிக்கெட்டுக்கு பிறகு என்ன செய்யப் போகிறீர்கள்? - எம்.எஸ்.தோனி அளித்த பதில்

தினத்தந்தி
|
22 Dec 2023 9:06 PM IST

ஐபிஎல் தொடரில் நான் இன்னும் இருக்கிறேன்.

துபாய்,

கிரிக்கெட்டில் இருந்து எம்.எஸ்.தோனி எப்போது ஓய்வு பெறப் போகிறார் என்பதுதான் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள ஒரே கேள்வியாக இருக்கிறது. தங்களது வாழ்க்கையில் பல மகிழ்ச்சி தருணங்களை கொடுத்த தோனி இன்னும் சில ஆண்டுகள் விளையாட மாட்டார்களா என்று தான் ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர்.

ஆனால் தோனிக்கு தற்போது வயது 42 ஆகிவிட்டது. இதனால் அவர் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பது முடியாத காரியம் ஆகும். ஏற்கனவே 2023 ஐபிஎல் சீசனோடு கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டு விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்களுக்காக மேலும் ஒரு சீசன் விளையாட முயற்சி செய்வேன் என்று தோனி கூறியது கிரிக்கெட் ரசிகர்களை சற்று ஆறுதல் அடைய வைத்துள்ளது. வரும் ஐபிஎல் முடிவடைந்த பிறகு தோனிக்கு 43 வயது ஆகிவிடும்.

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் தோனியிடம் நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்துள்ள தோனி நான் ஓய்வுக்கு பிறகு என்ன செய்யப் போகிறேன் என்று இதுவரை நான் யோசிக்கவில்லை. ஏனென்றால் நான் இன்னும் கிரிக்கெட் தான் விளையாடிக் கொண்டிருக்கிறேன்.

ஐபிஎல் தொடரில் நான் இன்னும் இருக்கிறேன். ஆனால் கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வு பெற்ற பிறகு நான் என்ன செய்யப் போகிறேன் என்பது குறித்து யோசிக்க எனக்கு ஆர்வமாக இருக்கிறது. ஆனால் நிச்சயமாக ஒரு விஷயத்தை கண்டிப்பாக செய்வேன். இந்திய ராணுவத்துடன் இணைந்து கூடுதல் நேரத்தை செலவிடுவேன். ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளாக என்னால் ராணுவத்தில் சென்று பணியாற்ற முடியவில்லை என்று எம்.எஸ்.தோனி வருத்தத்துடன் கூறினார்.

மேலும் செய்திகள்