விசாகப்பட்டின மைதான ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட எம்.எஸ்.தோனி
|தோனிக்கு நடப்பு ஐ.பி.எல் சீசன் கடைசி சீசனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விசாகப்பட்டினம்,
ஐ.பி.எல் தொடரின் 17வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் வார்னர் 52 ரன், பண்ட் 51 ரன் எடுத்தனர். இதையடுத்து 192 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 171 ரன் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் 20 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் இறுதிகட்டத்தில் வெற்றிக்காக போராடிய தோனி 16 பந்தில் 37 ரன்கள் எடுத்தார். தோனிக்கு நடப்பு ஐ.பி.எல் சீசன் கடைசி சீசனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த போட்டி முடிவுற்ற பின்னர் விசாகப்பட்டின மைதான ஊழியர்கள் தோனியுடன் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.