உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த கூடிய இளம் இந்திய வீரர்கள்...? சேவாக் கணிப்பு
|ஒரு சவாலான தருணத்தில், திறமையாக விளையாடி டெஸ்ட் சதம் அடித்துள்ளார் என சச்சின் தெண்டுல்கரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான வீரேந்திர சேவாக் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், 25 வயதுக்கு உட்பட்ட இரு இளம் வீரர்கள் வளர்ந்து வருவது பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த இரண்டு பேரும் அடுத்த தசாப்தத்திற்கும், அதற்கு அடுத்தும் உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த கூடும் என தெரிவித்து உள்ளார்.
அதற்கேற்ப, யஷஷ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரின் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், ஜெய்ஸ்வால் 209 ரன்களை சேர்த்து அணியை முன்னிலைக்கு வழிநடத்தி சென்றுள்ளார். இதில், 19 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்களும் அடங்கும்.
இதனால், 396 ரன்களை இந்தியா எடுத்தது. இதேபோன்று, இன்று நடந்த 2-வது இன்னிங்சில் இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து திணறியது. எனினும், மறுபுறம் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி 104 ரன்களை குவித்து, இந்தியா 255 ரன்களை எடுக்க உதவினார்.
ஒரு சவாலான தருணத்தில், திறமையாக விளையாடி டெஸ்ட் சதம் அடித்துள்ளார் என சச்சின் தெண்டுல்கரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து உள்ளார்.