கிரிக்கெட்
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகள்: தென் ஆப்பிரிக்காவின் சாதனையை முறியடித்த இந்தியா

Image Courtesy: AFP

கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகள்: தென் ஆப்பிரிக்காவின் சாதனையை முறியடித்த இந்தியா

தினத்தந்தி
|
1 Oct 2024 2:48 PM IST

வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது.

கான்பூர்,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இந்த தொடரின் ஆட்டங்கள் சென்னை மற்றும் கான்பூரில் நடைபெற்றன. இதில் சென்னையில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என இந்தியா முன்னிலையில் இருந்தது.

இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி கடந்த 27ம் தேதி கான்பூரில் தொடங்கியது. இந்த ஆட்டத்தின் 5வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 98 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா முழுமையாக கைப்பற்றியது. வங்காளதேசத்திற்கு எதிரான 2வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவின் சாதனை ஒன்றை முறியடித்துள்ளது.

அதாவது, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்ற அணிகள் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவை (179 வெற்றி) பின்னுக்கு தள்ளி இந்தியா (180 வெற்றி) 4வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்த பட்டியலில் முதல் 3 இடங்களில் ஆஸ்திரேலியா (414 வெற்றி), இங்கிலாந்து (397 வெற்றி), வெஸ்ட் இண்டீஸ் (183 வெற்றி) அணிகள் உள்ளன.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்ற அணிகள் பட்டியல்:

ஆஸ்திரேலியா - 414 வெற்றி

இங்கிலாந்து - 397 வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் - 183 வெற்றி

இந்தியா - 180 வெற்றி

தென் ஆப்பிரிக்கா - 179 வெற்றி

மேலும் செய்திகள்