< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஐ.சி.சி. தொடர்களில் இந்திய கேப்டனாக அதிக வெற்றிகள்: 2-வது இடத்தில் ரோகித்... முதலிடத்தில் யார் தெரியுமா..?
|14 Jun 2024 9:36 PM IST
ஐ.சி.சி. தொடர்களில் இந்திய அணியின் கேப்டனாக அதிக வெற்றிகள் பெற்றவர்களின் சாதனை பட்டியலில் ரோகித் 2-வது இடத்தில் உள்ளார்.
மும்பை,
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தனது முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
முன்னதாக அமெரிக்காவுக்கு எதிரான வெற்றி ஐ.சி.சி. தொடர்களில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவின் 17-வது வெற்றியாக பதிவானது. இதன் மூலம் ஐ.சி.சி. தொடர்களில் அதிக வெற்றிகள் பெற்ற இந்திய கேப்டன்களின் சாதனை பட்டியலில் கங்குலியை முந்தி 2-வது இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக எம்.எஸ். தோனி 41 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
அந்த பட்டியல்:
1. எம்.எஸ்.தோனி - 58 போட்டிகள் - 41 வெற்றிகள்
2. ரோகித் சர்மா - 20 போட்டிகள் - 17 வெற்றிகள்
3. கங்குலி - 22 போட்டிகள் - 16 வெற்றிகள்
4. விராட் கோலி - 19 போட்டிகள் - 13 வெற்றிகள்.